பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 5,851.62 கன அடி நீர்வந்து கொண்டிருக்கிறது.


புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 5,851.62 கன அடி நீர்வந்து கொண்டிருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 29 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 3 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 8 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 5851.62 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 5.60 அடி உயர்ந்து நீர்மட்டம் 105.95 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1304.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணைக்கும் நீர்வரத்து கணிசமாக இருந்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 121.29 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் மதகு வழியாக பாசனம் நிலங்களுக்கு 25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 168 கனஅடி நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 250 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம 3 அடி உயர்ந்து 63.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ராமநதி அணைக்கு விநாடிக்கு 140 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 64.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...