கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் வாய்க்கால் மேட்டுத்தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகள் சங்கீதா (24). சி.முட்லூர் அரசு கலைகக்கல்லூரியில் பிஏ படித்து முடித்துள்ள இவர் வெள்ளிக்கிழமை எம்ஏ பயிலுவதற்காக


சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை பூச்சிமருந்து குடித்து சாலையோரம் மயங்கி கிடந்த கல்லூரி மாணவி ஒருவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் வாய்க்கால் மேட்டுத்தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகள் சங்கீதா (24). சி.முட்லூர் அரசு கலைகக்கல்லூரியில் பிஏ படித்து முடித்துள்ள இவர் வெள்ளிக்கிழமை எம்ஏ பயிலுவதற்காக விண்ணப்பம் வாங்க வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சி.முட்லூர் அருகே ஸ்ரீராகவேந்திரா கல்லூரிக்கு எதிரே உள்ள சாலையில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்மாணவியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி சங்கீதா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...