கடந்த 3 நாட்களாக பார்வையற்ற மாணவர்களும், பட்டதாரி இளையோரும் சென்னையில் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பார்வையற்ற இளையோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை பரிவுடன் கவனிக்க வேண்டிய தமிழகஅரசு பாராமுகமாக உள்ளது. இந்நிலையில் செப்.19-ம் தேதி சாலைமறியல் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்த தமிழக காவல்துறையினர் அவர்களில் 19 பேரை கிழக்கு கடற்கரையில் சாலையில் ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாக செய்திகள் வந்துள்ளனர். இச்செயல் மிக கொடுமையானது. இதனை தமிழத் தேசப் பொதுவுடைமைக்கட்சி வன்மையாக கண்டிக்கிறது என கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.