டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற வாகன சோதனையின் போது காரில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த இருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான

News image
Updated On :20 செப்டம்பர் 2013, 9:47 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற வாகன சோதனையின் போது காரில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த இருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகளை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தி்ல் சிப்காட் போலீஸார் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா ராபர்ட் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கார் ஒன்று போலீஸாரை பார்த்ததும் சற்று தூரத்தில் நின்றது. தொடர்ந்து காரை ஓட்டி வந்தவர் காரில் இருந்து இறங்கி ஓட்டம்  பிடித்தார்.இதை கண்ட போலீஸார் அவரை துரத்தி மடக்கி பிடித்தனர். தொடர்ந்து காரை சோதனை செய்ததில் காரில் சுமார் 600 கிலோவிலான 16 செம்மரத்துண்டுகளை  பதுக்கி கடத்த இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீஸார் காரை ஓட்டி வந்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த மணி மகன் ரமேஷ்(23)என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.