சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ராஜா முத்தையா ITF (International Tennis Federation) சீனியர்ஸ் என்ற பெயரிலான பெரியவர்களுக்கான டென்னிஸ் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது. இப்போட்டி செப்.28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டிகளை கடலூர் மாவட்ட டென்னிஸ் அசோசியேஷன் மற்ஏறும் தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. போட்டிகளில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வீரரும், மற்றும் மும்பை, கல்கத்தா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர். திங்கள்கிழமை தொடங்கி முதல்நாள் போட்டியில் 45+. 55+. 65+ ஆகிய 3 பிரிவில் (ஒற்றையர்) மொத்தம் 24 போட்டிகள் நடைபெற்றன. தினமும் காலை 8 மணிக்கு போட்டிகள் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா செப்.28-ம் தேதி விழா நடைபெறுகிறது.
போட்டிகளின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாகும். இப்போட்டிக்கு தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன், ஒரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை உதவி அளித்துள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குநர் ரவீந்திரன், மாவட்ட டென்னிஸ் அசோசியேஷன் தலைவர் ஆர்.கே.கணபதி, செயலாளர் ஆர்.எம்.சுவேதகுமார், பொருளாளர் கனகவேல், கே.வி.பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை திட்டப்பணிகளை துரிதப்படுத்த திமுக எம்.பி. கோரிக்கை

சென்னை: 4,097 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிப்பு

முதல்வருடன் தருண் குடும்பத்தினா் சந்திப்பு

8 மாதங்களில் 205 கைப்பேசிகள் மீட்பு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

