விடுதிக்குள் புகுந்த பாம்பு: அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள ஆதிதிராவிடநல மாணவர் விடுதிக்குள் செவ்வாய்க்கிழமை காலை பாம்பு ஒன்று புகுந்ததால் மாணவர்கள் பெட்டி, படுக்கையுடன் வெளியேறி அடிப்படை


சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள ஆதிதிராவிடநல மாணவர் விடுதிக்குள் செவ்வாய்க்கிழமை காலை பாம்பு ஒன்று புகுந்ததால் மாணவர்கள் பெட்டி, படுக்கையுடன் வெளியேறி அடிப்படை வசதி கோரி விடுதி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் 45 மாணவர்களும், ஆதிதிராவிடர் நல விடுதியில் 49 மாணவர்களுக்கு தங்கி பயிலுகின்றனர். இவ்விடுதிக்கு சாலை தாட்கோ மூலம் ரூ.25 லட்சம் செலவில் போடப்பட்டு நடந்து செல்ல முடியாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் விடுதிக்கு குடிநீர், மின்விளக்கு வசதி கிடையாது. விடுதியில் தங்கியுள்ள 45 மாணவர்களுக்கு சமைக்க தினமும் 150 கிராம் எண்ணெய்யும், குறைந்தளவே காய்கறிகள் வழங்கப்படுவதாக விடுதி மாணவர்கள் எடுத்து வந்து காண்பித்தனர்.
இந்நிலையில் ஆதிதிராவிடர்நல மாணவர் விடுதிக்குள் அருகாமையில் உள்ள புற்றிலிருந்த பாம்பு ஒன்று செவ்வாய்க்கிழமை காலை திடீரென புகுந்தது. இதனால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு பெட்டி, படுக்கையுடன் வெளியேறி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் ஆதிதிராவிடநல அலுவலக ஊழியர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...