மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு: ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்கடேச பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார்

News image
Updated On :25 செப்டம்பர் 2013, 9:23 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்கடேச பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அம்மன்புரம் கிராமத்தில் வெங்கடேச பண்ணையார் நினைவு நாள் வியாழக்கிழமை (செப்டம்பர் 26)கடைபிடிக்கப்படுகிறது.  இந்த நிகழ்ச்சியில் வெளிமாவட்டங்கள் மற்றும் உள்ளுரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பல்வேறு பிரிவினர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிய வருகிறது.வெளி மாவட்டம் மற்றும் உள்ளுரில் இருந்து அம்மன்புரம் கிராமத்திற்கு பல்வேறு பிரிவுகளை சார்ந்த அமைப்பினர் அழைத்துவரும் வாகனங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கையின்படியும் வழக்கமாக செல்லும் பஸ்கள், சரக்கு வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், உள்ளுர் பள்ளிக்கூடம், கல்லூரி வாகனங்கள், வாடிக்கையாக வந்து செல்லும் பஸ்கள், மற்ற இடங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இந்த வாகனங்களை தவிர அம்மன்புரம் கிராமத்துக்கு பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அமைப்பினர் ஏற்றி வரும் இதர வாகனங்கள் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் நுழையத் தடை விதித்து குற்றவியல் உரிமைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24)  இரவு 8 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27)  இரவு 8 மணி வரை நடைமுறையில் இருக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.