டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆரம்பாக்கத்தில் 1 டன் செம்மரம் பறிமுதல்: ஒருவர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1 டன் செம்மரத்தை ஆரம்பாக்கம் போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை பறிமுதல்

News image
Updated On :27 செப்டம்பர் 2013, 9:03 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1 டன் செம்மரத்தை ஆரம்பாக்கம் போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆரம்பாக்கம்-மாதர்பாக்கம் சாலையில் ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட்,சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் உட்பட போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த காரை சோதனையிட்டதில் அந்த காரில் சுமார் 1 டன் மதிப்புள்ள 12 செம்மர துண்டுகள் பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரை ஓட்டி வந்த மாதர்பாக்கத்தை சேர்ந்த வினோத்(24) என்பவரை ஆரம்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட செம்மரத்துண்டுகளின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சமாகும். கடந்த சில மாதங்களில் ஆரம்பாக்கம் போலீஸார் 5 முறை வாகன சோதனையில் செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.