கிருஷ்ணகிரி அணை அருகே அம்மன் கோயிலில் நகை, பணம் கொள்ளை
கிருஷ்ணகிரி அணை அருகே அம்மன் கோயிலில் நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


கிருஷ்ணகிரி அணை அருகே அம்மன் கோயிலில் நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி அணை அருகே நடுமுத்தூர் பச்சை கொட்டாய் பகுதியில் அருள்மிகு பூங்காவனத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் பூசாரியாக உள்ளார்.
இந்த நிலையில், கோயிலை வழக்கம்போல பூசாரி வெள்ளிக்கிழமை இரவு பூட்டிச்சென்றாராம். இந்த நிலையில் சனிக்கிழமை காலை கோயில் கதவு உடைக்கப்படிருந்ததாம். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கோயில் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அம்மன் சிலையில் இருந்த சுமார் 6 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...