திருவள்ளூர் நகர்புற பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதால் அந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதிகளில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பெரியகுப்பம் சித்திவிநாயகர் கோவில் தெரு, லட்சுமிபுரம், புங்கத்தூர், வரதராஜநகர், முகம்மது அலி தெரு ஜவகர் நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. அந்த குரங்குகள் ஆட்கள் ஏமாறும் நேரம் பார்தது கடைகளில் உள்ள பழங்கள், வெளியில் தொங்க விடப்பட்டுள்ள பொருள்கள் என பார்த்து எடுத்துச் செல்கிறது. இதனால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.வீடுகளில் நுழையும் குரங்குகள் பெண்கள் சமையலுக்காக வைத்திருக்கும் காய்கறிகள், உணவு பண்டங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு செல்கிறது. அதை தடுக்க நினைக்கும் நபர்களை பிராண்டி விடுகின்றது. இதனால் வீட்டில் உள்ள பெண்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இது தவிர சாலைகளில் நடந்து செல்லும் நபர்கள் பையில் கொண்டு செல்லும் உணவு பொருள்கள், நடைபாதை வியாபாரிகள் என அனைவரிடமும் குரங்கள் தங்களது கை வரிசையை காட்டுகிறது. வீடுகளின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளின் மூடியை திறந்து தண்ணீர் குடிப்பதற்காக அதை குடிநீர் தொட்டிகளை குரங்கள் அசுத்தப் படுத்துகின்றன.இதுபோல் குரங்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. நாளுக்கு நாள் நிலப்பகுதிகள் மரங்கள் அழிக்கப்பட்டு அங்கு பிளாட்டுக்கள் போடப்படுவதால் குரங்களுக்கு உணவுப் பஞ்சம் மற்றும் இருப்பிடத்துக்கு இடம் இல்லாததால் இதுபோல் நகரில் புகுந்து குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன.
எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து திருவள்ளூர் நகரில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிகளில் விட வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



