கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடச் சென்ற அதிகாரிகள் கேரள போலீஸாரால் கைது

முல்லை பெரியாறு அணையை கடந்த ஒரு வார காலமாகப் பார்வையிடச் சென்ற தமிழக அதிகாரிகளை கேரள போலீஸார் தடுத்து, அவர்கள் கையெழுத்திட்டுச் சென்றால்தான் அனுமதிப்போம் என்று கூறியதால்,

News image
Updated On :30 செப்டம்பர் 2013, 12:38 pm

அறிவழகன்

முல்லை பெரியாறு அணையை கடந்த ஒரு வார காலமாகப் பார்வையிடச் சென்ற தமிழக அதிகாரிகளை கேரள போலீஸார் தடுத்து, அவர்கள் கையெழுத்திட்டுச் சென்றால்தான் அனுமதிப்போம் என்று கூறியதால், அதிகாரிகள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்றும் அணையைப் பார்வையிடச் சென்ற அதிகாரிகளை கேரள போலீஸார் தடுத்து நிறுத்தி கையெழுத்திட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதனிடையே, தமிழக அதிகாரிகள் சென்ற படகில் இருந்து மது பாட்டில்கள் 5 கைப்பற்றப் பட்டதாகவும், அதனால் அவர்களைக் கைது செய்வதாகவும் கேரள போலீஸார் கூறி, அதிகாரிகளைக் கைது செய்தனர். ஆனால், தாங்கள் மது பாட்டில்கள் கொண்டு வரவே இல்லை என்று தமிழக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.