நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

5 நிமிடங்களில் ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவன் நானாகவே இருப்பேன்: கே.ஐ.மணிரத்தினம்

உலகத்திலேயே கட்சியில் சேர்ந்த 5 நிமிடங்களில் ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவன் என்றால், அது நானாகவே இருப்பேன். அதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜெ.

News image
Updated On :1 ஏப்ரல் 2014, 11:27 am

ஜி.சுந்தரராஜன்

உலகத்திலேயே கட்சியில் சேர்ந்த 5 நிமிடங்களில் ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவன் என்றால், அது நானாகவே இருப்பேன். அதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜெ.குரு எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதி தேசிய ஜனநாய கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி புதிய வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார்.

சிதம்பரம் ஹோட்டல் அக்க்ஷயாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் செவ்வாக்கிழமை பங்கேற்ற வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் பேசியதாவது:

நான் சிதம்பரம் நடராஜப்பெருமானை நம்புபவன்.நான் எங்கோ கையை வைத்து, எங்கோ கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் நடராஜர். அரசியலில் ஈடுபாடு இல்லாத நேரங்களில் சாதி, மத வேறுபாடின்றி ஏழை, எளிய மக்களுக்கு சமூக சேவைகளை செய்து வந்துள்ளேன். நடராஜப்பெருமான் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் பிரதமராக வரஇருக்கின்ற மோடியின் தலைமையி்ன் கீழ் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பினை அளித்துள்ளார். அதற்காக நான் வணங்கும் நடராஜப்பெருமானுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏப்.2-ம் தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த தொகுதிக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை தெரிவிக்கவுள்ளேன். இந்தியாவில் மாற்றம் நிகழும் என்றால், அது என்னை பார்த்தே அந்த மாற்றம் நிகழப்போகின்றது. மாற்றம் வேண்டும் என்பது மணிரத்தினத்திற்கு நிச்சயமாக பொருந்தும், இந்தியாவிற்கும் பொருந்தும். எனவே மாற்றம் நிச்சயமாக நிகழவுள்ளது என கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார்.

கூட்டத்திற்கு பாஜக மாவட்டத் தலைவர் ஜே.சுகுமாறன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் துறைமுகம் செல்வம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கே.ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், நகரத் தலைவர் ஆர்.திருமாறன், பாட்டாளி மக்கள் கட்சி தொகுதி பொறுப்பாளர் கு.திருஞானம், பாமக மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், நகரத் தலைவர் முத்து.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக சிதம்பரம் நகருக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பாமக புதிய வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் சபாநாயகர்தெருவில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில், மாநில பொதுச்செயலாளர் கு.திருஞானம், மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், நகரச் செயலாளர் முத்து.குமார், நகரத்தலைவர் பி.கே.அருள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவருக்கு பாமகவினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பி்ன்னர் கே.ஐ.மணிரத்தினம் தேசிய முற்போக்கு திராவிட கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக, பாரதிய ஜனதா கட்சி, புதிய நீதிக்கட்சி நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.