அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கு: சேலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

 பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி மரவனேரி பகுதியில் உள்ள

News image
Updated On :2 ஏப்ரல் 2014, 1:29 pm

தங்கராஜா

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

 பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி மரவனேரி பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்தனர்.

 இவர்கள் வேறு சில கொலை வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸôர் கூடுதல் அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

 இந்த அவகாசம் ஏப்ரல் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், டி.எஸ்.பி. ராஜன், ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயலட்சுமியிடம் குற்றப்பத்திரிகையை புதன்கிழமை தாக்கல் செய்தனர்.

 சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், சுமார் 9 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.