சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசி மீது வழக்குப் பதிவு

சிதம்பரம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக கூடுதல் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ததாக அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Updated On :3 ஏப்ரல் 2014, 3:26 pm

சிதம்பரம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக கூடுதல் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ததாக அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று சிதம்பரம் நகரில் 33 வார்டுகளிலும் வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் வாக்கு சேகரிக்கும் போது மேலரதவீதியில் மா.சந்திரகாசி தனது வாகனத்துடன், 100 மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்ததால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக தேர்தல் ஆணைய நிலை கடுங்கண்காணிப்புக்குழு அலுவலர் பொன்னி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி மீது வழக்குப் பதிந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.