மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை கைது
துரையரசபுரம் பழைய காலணியை சேர்ந்தவர் பழனிவேல்(75), இவரது மகன் விஜயராஜ்(45) இவருக்கு மனைவி 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். விஜயராஜ் துரையரசபுரம் கூட்டுறவு நூற்பாலையில்


அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் குடும்பத்தகராறு காரணமாக சனிக்கிழமை இரவு தந்தையே மகனை குத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
துரையரசபுரம் பழைய காலணியை சேர்ந்தவர் பழனிவேல்(75), இவரது மகன் விஜயராஜ்(45) இவருக்கு மனைவி 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். விஜயராஜ் துரையரசபுரம் கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். பழனிவேலுவும், அழகுராஜூம் அடுத்தடுத்த வீடுகளில் வசித்துவருகின்றனர். அழகுராஜ் கடந்த சில மாதங்களாக தந்தை பழனிவேலுக்கு செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும்
சனிக்கிழமை இரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது அருகில் இருந்த கத்தியால் பழனிவேலு விஜயராஜூவை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி அழகுராஜ் இறந்து விட்டார்.
ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் குலோத்துங்கன் கத்தியால் குத்தி கொலை செய்ததாக தந்தை பழனிவேலை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...