47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மயிலாடுதுறை தொகுதியில் 5 வேட்புமனுக்கள் தள்ளுபடி

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலினையின் போது, ஒரு சுயேட்சை வேட்பாளரின் மனு உள்பட 5 மனுக்கள் திங்கள்கிழமை தள்ளுபடி

News image
Updated On :7 ஏப்ரல் 2014, 12:33 pm

சங்கர்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலினையின் போது, ஒரு சுயேட்சை வேட்பாளரின் மனு உள்பட 5 மனுக்கள் திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்), ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக), க. அகோரம் (பாமக), செ. ஹைதர் அலி (மமக) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி,  சமாஜ்வாடி ஆகிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 28 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில், மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ. ஹைதர் அலி மற்றும் அவரது மாற்று வேட்பாளர் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தலா ஒருவர் பதிலியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான து. முனுசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, வேட்புமனு பரிசீலினைக்கு உரிய காலத்தில் பங்கேற்காதது மற்றும் வேறு தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பது தொடர்பான சான்று வழங்காதது உள்ளிட்ட காரணங்களின் கீழ், சுயேட்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த, திருவாரூர் மாவட்டம், திருமாளம் பகுதியைச் சேர்ந்த ப. ஆறுமுகம் என்பவரின் வேட்புமனுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவுப் பெற்ற அரசியல் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதையடுத்து, அந்த வேட்பாளர்களுக்கான மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்படி, மணிசங்கர் அய்யரின் மாற்று வேட்பாளர் ராமகிருஷ்ணன், ஆர்.கே. பாரதிமோகனின் மாற்று வேட்பாளர் ராஜம்மாள் ஆகியோரது மனுக்களும்,  செ. ஹைதர் அலி மற்றும் அவரது மாற்று வேட்பாளர் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு  பதிலியாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பாமக வேட்பாளர் க. அகோரத்தின் மாற்று வேட்பாளர் கோ. ஆலயமணி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாற்று வேட்பாளர் தமிமுன் அன்சாரி ஆகிய 2 பேரின் வேட்புமனுக்களும் தலா 10 பேரால் முன்மொழிவு செய்யப்பட்டிருந்ததால், முக்கிய வேட்பாளரின் மனு ஏற்கப்பட்ட நிலையிலும்,  அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை.  

ஒரு வேட்பு மனு 10 பேர் முன்மொழிவுடன் தாக்கல் செய்யப்பட்டால், அவருக்கு சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் தகுதி கிடைப்பதன் அடிப்படையில், கோ. ஆலயமணி, தமிமுன் அன்சாரி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த 2 பேரும் தங்கள் மனுவைத் திரும்பப் பெறாவிட்டால், அவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாகக் கணக்கில் கொள்ளப்படுவர் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.