டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கும்மிடிப்பூண்டியில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே சாமிரெட்டிக் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வெண்ணிலா செவ்வாய்க்கிழமை காலை அருகில் ராமாபுரம் என்ற பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

News image
Updated On :9 ஏப்ரல் 2014, 7:41 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அருகே சாமிரெட்டிக் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வெண்ணிலா செவ்வாய்க்கிழமை காலை அருகில் ராமாபுரம் என்ற பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த அரை கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டரை சவரன் நகை, 10 ஆயிரம் ரொக்கத் தொகையை மர்ம நபர்கள் வீட்டில் இருந்து திருடியுள்ளது தெரியவந்தது. 

இது குறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதே போல், கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள துணிக்கடை ஒன்றில் திங்கள் நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து 35ஆயிரம் மதிப்பிலான துணிகள் மற்றும் 5ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடி சென்றனர்.

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியை சேர்ந்த அஜ்மல்கான(42) என்பவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் துணிக் கடை வைத்து இருக்கிறார். இந்நிலையில் திங்கள் இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று செவ்வாய்க்கிழமை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் மேற்கூரையை பெயர்த்து அதன் வழியே மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடையில் இருந்த 35 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் மற்றும் 5 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து அஜ்மல்கான் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.