நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களை விட்டு போகாமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது: திமுக தலைவர் மு.கருணாநிதி

கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் மீது பற்று உடையவன் நான்.  அடுத்து வரும் தேர்தல்களில், அவர்கள் எங்களை விட்டு போகாமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றித் தருவேன் என இந்த மேடையில் உறுதிகூறுகிறேன் என கருணாநிதி தெரிவித்தார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2014, 9:43 am

ஜி.சுந்தரராஜன்

கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் மீது பற்று உடையவன் நான்.  அடுத்து வரும் தேர்தல்களில், அவர்கள் எங்களை விட்டு போகாமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றித் தருவேன் என இந்த மேடையில் உறுதி கூறுகிறேன் என கருணாநிதி தெரிவித்தார்.

சிதம்பரம் கீழரதவீதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நாடளுமன்றத் தொகுதி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து திமுக தலைவர் மு.கருணாநிதி பேசினார்.

அவர் பேசியது:

அவருக்கு கணையாழி சின்னம் அவரது கட்சிக்கு கிடைத்துள்ளது குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நான் கேள்விப்பட்டேன். அங்கேயே அவருக்கு வாழ்த்து தெரிவித்து, மோதிரம் சின்னம் கிடைத்திருப்பது நல்ல அடையாளம். தேர்தல் வெற்றி நிச்சயம் என்பது மட்டும் குறிப்பதல்ல, திருமாவளவனுக்கு விரைவில் திருமணம் நிச்சயம் என்பதற்கு அடையாளம்தான் இந்த மோதிரம் சின்னம் வழங்கியிருப்பது.  நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவனுக்கு ஆதரவை கனையாழி சின்னம் மூலம் வழங்கி வெற்றி பெறச்செய்தால், அவர் திருமணத்திற்கு சம்மதித்து அதை ஏற்றுக்கொள்ளுவார் என்பதில் மகிழ்ச்சியடைவேன்.

இன்று மாலையில் ஒரு பத்திரிகையை படித்தேன். இந்தியாவினுடைய பிரதமராக வீற்றிருக்கக்கூடிய வகையில் போட்டிக்களத்திலே நிற்பவராக நரேந்திரமோடி விளங்குகிறார். அவரை வெற்றி பெறச்செய்யலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வதற்கு முன்பு, அதனை பற்றிய சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் திராவிட இயக்கத்திற்கு வேண்டியவர் என்று சொல்லுவார்கள். திராவிட இயக்கத்திற்கு, அவரோ, அவரை சேர்ந்த கட்சிக்காரர்களோ என்றும் பணிந்ததில்லை. திமுக, திராவிடர் இயக்கம் இந்த இயக்கத்தின் வெற்றிகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  தமிழகத்தில் திமுகவினுடைய ஆக்கமும், ஊக்கமும் இருக்கின்ற வரையில், எங்கள் அலையை தாண்டி வேறு யாரும் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணாதீர்கள். காரணம். நாங்கள் மதச்சார்பற்ற கொள்கை மீது நம்பிக்கையுடையவர்கள். நாங்கள் தமிழகத்திலும் சரி, இந்தியாவிலே உள்ள பல பகுதிகளிலும் சரி மதக்கொள்கைக்கு, மதச்சார்பான கொள்கைக்கு அணுவளவும் இடம் தர மாட்டோம். நாங்கள் அதை அனுபவத்திலே உணர்ந்து சொல்ல வேண்டியவர்களாக உள்ளோம். திமுக இந்த தேர்தலில் கடுமையாக ஈடுபட்டுள்ளது. எங்களது வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு சுற்றி, சுற்றி சுழன்று வருகிறோம். என்ன காரணம். எம்பிக்களாக வேண்டும். அதிகாரத்திற்கு வர வேண்டும். மத்தியில் அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் இந்த தேர்தலை எதிர்கொண்டு இம்மியளவும் வேறு எந்த கட்சிக்கும் இடம் தர மாட்டோம் என்பதற்கு காரணம். எந்த கட்சி வந்தாலும் வரட்டும், மதவாத்திற்கு முட்டுக்கொடுக்கிற, மதச்சார்புள்ள எந்த ஒரு கட்சியும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

ஆனால் தமிழ்நாட்டில் தலைவர்களும் சரி, இந்தியாவில் உள்ள தலைவர்களும் தரி நான்தான் பிரதமர் என மார்தட்டி வருகின்றனர். திமுக சார்பில் நாங்கள் யாரும் பிரதமராக வருவோம் என்று விரும்புவர்கள் அல்ல. நாங்கள் பிரதமர்களை உருக்குவோமே தவிர, நாங்கள் பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுபவர்கள் அல்லை. அப்படி உருவாக்கப்பட்ட பிரதமர் யார், யார் என நாட்டிற்கு நன்றாக தெரியும். இந்திராகாந்தியை பிரதமராக வர நான் பாடுபட்டேன். ஆனால் ஜெயலலிலா சோனியா காந்தி இந்தியரப் அல்ல. பிரதமருக்கு அவர் தகுதி கிடையாது எனக்கூறினார். அதற்கு நான் அவருக்கு சொன்ன பதில் ராஜிவ்காந்தி இந்தியர்தானா. அவரது துணைவியார் சோனியாவும் இந்தியர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சி தலைவராக வரவும், பிரதமராக வரவும் பொருத்தமானதுதான் என ஓங்கி அடித்து சொன்னேன்.

இன்றைய தினம் ஒரு துணைவி இருக்கிறார் என்பதை நரேந்திர மோடி சொல்லி உள்ளார். தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிடாமல் விட்டு விட்டேன் என்று சொல்லி இருக்கிறார். வேட்புமனுவில் குடும்பத்தார் பெயரை சொல்ல வேண்டியது அவசியம், அப்படி சொல்லாதது, அது தேர்தல் ஆணையத்தின்படி குற்றம். ஆனால் மோடி திருமணமானதை சொல்லாமல் இருந்து வந்தார் என்றால், இவர் பிரதமராக வருவதற்கு என்ன தகுதி உள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மோடி தான் செய்த தவறை, மனைவி உண்டு என்பதை வெளியிடாத தவறை எப்படி மறைக்க போகிறார். எப்படி தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். அதை தேர்தல் ஆணையத்திடமே விட்டுவிடுகின்றேன். மனைவி உள்ளதை மறைந்த மோடி நாளைக்கு எதை மறைக்க மாட்டார். மோடியை நல்லவர், வல்லவர் என்று கருதியவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேலும் அவரும், அவரது கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் ராமர் கோயில் கட்டுவோம் எனக்கூறியுள்ளனர். இந்தியாவில் மதக்கலவரத்தை உண்டு பன்னுவதை இப்போதே தொடங்கி வைத்துள்ளனர். ராமர் எங்களுக்கு விரோதி அல்ல. ராமர் கோயில் கடடினால், பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஜெயலலிதா போன்றவர்கள் ஆதரவு கொடுப்பார்கள். ஏற்கனவே அவர் கர சேவைக்கு ஆதரவு அளித்தவர். எங்களுக்கு ராமர், கிருஷ்ணர் எதிரிகள் அல்ல. கடவுளின் பெயரால் நாட்டின் சாதாரண மக்களிடம் கலவரத்தை, அராஜகத்தை ஏற்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஜெயலலிதா தேர்தல் கூட்டணியில் இஸ்லாமியர்களுக்கு, ஆதிதிராவிட இயக்கத்தினருக்கு இடம் ஒதுக்கவில்லை. தோழமை கட்சியாக இருந்த கம்யூ கட்சிகளை காலை வாரிவிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி நிலையை பார்த்து பரிதாபப்படுவதாக நான் சொல்ல மாட்டேண். அவர்கள் ஒருகாலத்தில் எனது உயிர் நண்பர்கள். எங்களுக்கு என்னதான் அபிப்ராயம் இருந்தாலும், கருணாநிதி ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். கம்யூனிஸிம் சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றுி உடையவன் என்ற முறையில் வருத்தமடைகிறேன், அனுதாபமடைகிறேன். அடுத்து வரும் தேர்தல்களில், அவர்கள் எங்களை விட்டு போகாமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றி தருவேன் என இந்த மேடையில் உறுதிகூறுகிறேன் என கருணாநிதி தெரிவித்தார்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியின் துணைவியார் ராசாத்திஅம்மாள்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், வேட்பாளருமான தொல்.திருமாவளவன்,  முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசு, திமுக நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.