பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐக்கிய கிறிஸ்தவ குருத்தோலை பவனி

இயேசு கிறிஸ்து எருசலேம் நகரில் கழுதையின் மேல் பவனியாக வந்ததைக் குறிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. கிறிஸ்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் குருத்தோலைகளை ஏந்திக் கொண்டு ஓசன்னா, ஓசன்னா என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டு நகரில் ஞாயிற்றுக்கிழமை பவனியாக வந்தனர்.மனுக்குலத்தின் மீட்பிற்காக இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்து, நாற்பது நாள்கள் உபவாசம் இருந்து உலகத்தை ஜெயித்தார்.

News image
Updated On :13 ஏப்ரல் 2014, 8:25 am

கே.ஜெயக்குமார்

இயேசு கிறிஸ்து எருசலேம் நகரில் கழுதையின் மேல் பவனியாக வந்ததைக் குறிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. கிறிஸ்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் குருத்தோலைகளை ஏந்திக் கொண்டு ஓசன்னா, ஓசன்னா என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டு நகரில் ஞாயிற்றுக்கிழமை பவனியாக வந்தனர்.மனுக்குலத்தின் மீட்பிற்காக இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்து, நாற்பது நாள்கள் உபவாசம் இருந்து உலகத்தை ஜெயித்தார்.

இந்த 40 நாட்களை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் லெந்து காலமாக அனுசரிப்பார்கள். இந்த நாட்கள் கடந்த 5.3.14-ம் தேதி சாம்பற் புதன்கிழமை முதல் ஆரம்பமானது. இந்த நாட்களில் தேவாலயங்களில் சிறப்பு சிலுவை தியான ஆராதனைகள் நடைபெறும். இயேசு கிறிஸ்து மனுக்குலத்திற்கு தாழ்மையைக் கற்றுத் தருவதற்காக எருசலேம் நகரில் இதைப்போன்ற ஒரு நாளில் பவனியாக வந்தார்.

அப்போது நகரத்தார் தாவீதின் குமாரனுக்கு ஒசன்னா, சமாதான பிரபுவுக்கு ஓசன்னா என கோஷங்களை எழுப்பி கைகளில் குருத்தோலைகளை ஏந்தி பவனியாகச் செல்வார்கள். இதனைக் குறிக்கும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்னிந்திய திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்க சபை மக்கள் ஒன்று சேர்ந்த குருத்தோலை பவனியை நடத்தினர். முன்னதாக திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இதற்கான சிறப்பு கூட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் அருள்திரு கே.முத்துச்செல்வன், அருட்தந்தை ஜி.அந்தோணிராஜ் அடிகளார் ஆகியோர் தேவ செய்தியளித்தனர்.

 பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என கோஷங்களை எழுப்பி நகரின் முக்கிய வீதிகளின் வழியே பவனியாக வந்தனர். பின்னர் அவரவர் ஆலயங்களில் சிறப்பு குருத்தோலை ஞாயிறு ஆராதனை நடைபெற்றது.சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் அரியலூரைச் சேர்ந்த பாஸ்டர் ஒய்.வெஸ்லி தேவ செய்தியளித்தார். சபைகுரு அருள்திரு கே.முத்துச்செல்வன் ஆராதனையை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமை முதல் கிறிஸ்தவர்கள் பரிசுத்த வாரத்தை அனுசரிக்கிறார்கள். 17 (வியாழக்கிழமை) புனித வியாழன் அன்று இரவு இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் நடத்திய கடைசி ராபோஜனத்தைக் குறிக்கும் வகையில் திருவிருந்து ஆராதனை தேவாலயங்களில் நடைபெறும். 18 (வெள்ளிக்கிழமை) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டதைக் குறிக்கும் புனித வெள்ளி மும்மணி தியான ஆராதனை ஆலயங்களில் நடைபெறும். 20 (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.