நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காணொளி காட்சி மூலம் ஜெயலலிதா மக்களிடம் வாக்கு கேட்கலாமே? : அன்புமணி ராமதாஸ் கேள்வி

மக்களை சந்திக்காமல், காணொளி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கிய ஜெயலலிதா, மக்களிடம் கானொளி காட்சி மூலமே வாக்கு கேட்கலாமே என சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

News image
Updated On :13 ஏப்ரல் 2014, 9:29 am

ஜி.சுந்தரராஜன்

மக்களை சந்திக்காமல், காணொளி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கிய ஜெயலலிதா, மக்களிடம் கானொளி காட்சி மூலமே வாக்கு கேட்கலாமே என சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் சுதா மணிரத்தினத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் கு.திருஞானம் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் வேணுபுவனேஸ்வரன் வரவேற்றார்.

கூட்டத்தில் பாமக மாநில இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அவர் பேசியது: இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அமைதியாக வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். நாம் வெற்றி பெறவில்லையெனில் உந்த பகுதியில் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும். அதற்கு காரணம் என்னவென்று தெரியும். இந்த தொகுதி எம்பியாக உள்ள திருமாவளவன் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார். எதுவும் செய்யவில்லை. ஆனால் தலித் மக்களுக்கு செய்துவிட்டது போல் தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.

தலித் மக்களுக்கு அவர் செய்தார். உங்களை நம்பியுள்ள சமுதாயத்தினரை அத்துமீறு, அடங்கமறு, ஆயுதம் ஏந்து என்ற சொன்னார்? இப்படி பேசுவதுதான் தலைவருக்கு அழகா? நான் அமைச்சராக இருந்த போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் தலித் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை பெற்று தந்தவன். உங்களால் சொல்ல முடியுமா? நான் பாமகவினரை நன்றாக படியுங்கள் என்று கூறுகிறேன். எனது சமுதாயத்தினர் மீது இனிமேல் ஒரு வழக்குக்கூட இருக்கக்கூடாது. நீதிமன்றம், காவல் நிலையம் செல்லக்கூடாது.

அமைதியாக இருக்க வேண்டும் எனக்கூறி வருகிறேன். இந்த பகுதி அமைதிக்கும், வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கின்றேன். சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தை நாங்கள் கொண்டு வந்தோம். எந்த கட்சிக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. தேசிய ஜனநாய கூட்டணிக்கு மட்டும்தான் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி உள்ளார். குஜராத்தை போல் நாட்டை வளர்ச்சியடைய செய்வார். திமுக, காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. 47 ஆண்டுகளாக ஆண்டு வரும் திமுக, அதிமுக வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாளுக்கு நாள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு பெருகி வருகிறது. குறைந்தது 30 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக முடிந்த போன கதை. 97 வயதான கருணாநிதி வசனம் பேசி வருகிறார்.

மக்களை சந்திக்காமல், வாக்கு கேட்டு ஹெலிகாப்டரில் ஜெயலலிதா பறந்து வருகிறார். ஆண்டு மூன்று முறைதான் வெளியே வருவார். சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்கு வெளியே வருவார். பின்னர் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வெளியே வருவார். சென்னையில் அமர்ந்து கொண்டு கானொளி மூலம் திட்டங்களை பட்டன் அழுத்தி திறந்து வைக்கிறார். ஏன் மக்களிடம் கானொளி மூலம் வாக்கு கேட்கலாமே? ஏன் பறந்து வருகிறார். மக்கள் சிந்திக்க வேண்டும். வளம், அமைதி, வளர்ச்சி என்று கூறி வருகிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் கரண்ட் இல்லை, 60 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலைவாய்ப்பு இல்லை. இதுதான் வளமா. ஒரு நாளுக்கு 9 கொலைகள், ஆண்டிற்கு 6500 கொலை நடந்துள்ளது. இதுதான் அமைதியா? மதுக்கடைகள்தான் வளர்ச்சியடைந்துள்ளது. இதுதான் வளர்ச்சியா? மதுகடைகளின் வரும் பணத்தில் இலவசத்தை கொடுத்து வருகிறார். நாங்கள் தரமான கல்வி தருவோம், தரமான சுகாதாரம் தருவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக மாவட்டச் செயலாளர் வைத்தி, செந்தில்குமார், சிதம்பரம் நகரச் செயலாளர் முத்து.குமார், நகரத் தலைவர் பி.கே.அருள், தேமுதிக மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார், நகரச் செயலாளர் சி.க.விஜயகுமார், பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் சுகுமாறன், மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், நகரத் தலைவர் திருமாறன், புதிய நீதிகட்சி மாவட்டச் செயலாளர் உமாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர். நகரச் செயலாளர் முத்து.குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.