/

கும்பலாக அமர்ந்து பூத் சிலிப் விநியோகம்: சென்னையில் கட்சியினரை "தூக்கி”ச் சென்ற போலீஸார்

சென்னையில் வாக்குச் சாவடிகள் அருகில் கும்பலாக அமர்ந்து பூத் சிலிப் விநியோகம் செய்தவர்களை போலீஸார் சில இடங்களில் விரட்டியடித்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:05 am

அரவிந்தன்

சென்னையில் வாக்குச் சாவடிகள் அருகில் கும்பலாக அமர்ந்து பூத் சிலிப் விநியோகம் செய்தவர்களை போலீஸார் சில இடங்களில் விரட்டியடித்தனர்.

பல இடங்களில் பத்து பதினைந்து பேராக அமர்ந்து பூத் சிலிப் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து,  எஸ்.பி சுதாகர் தலைமையில் வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட  பெரியார் நகர், கொளத்தூர் பகுதியில் சோதனை செய்தனர். போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தவர்களை அவர்கள் கலைந்து போகச் செய்தனர்.

2 பேருக்கு மேல் அமர்ந்திருக்கக் கூடாது என்ற விதியை மீறி, கும்பலாக அமர்ந்து திமுக., அதிமுகவினர் பூத் சிலிப் விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், கட்சி சின்னம் அச்சிடப் பட்ட பூத் சிலிப்களையும் கொடுத்து அனுப்புகின்றனர். இவற்றை கட்சி பாகுபாடின்றி போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.