தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல்: அதிர்ஷ்ட வசமாக பயணிகள் உயிர் தப்பினர்

திருச்சியில் இருந்து இன்று காலை 10: 30 மணிக்கு சிங்கப்பூருக்கு  புறப்பட இருந்த  டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் இருந்தது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

News image
Updated On :4 ஆகஸ்ட் 2014, 8:13 am

கவியழகன்

திருச்சியில் இருந்து இன்று காலை 10: 30 மணிக்கு சிங்கப்பூருக்கு  புறப்பட இருந்த  டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் இருந்தது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

சிங்கப்பூரிலிருந்து நேற்று திருச்சி வந்த டைகர் ஏர்லைன்ஸ் இன்று காலை 10.30 மணிக்கு 167 பயணிகளை ஏற்றிகொண்டு மீண்டும் சிங்கப்பூர் செல்லவிருந்தது. அப்போது கடைசி நேர சோதனையின் போது விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விமானம் ரத்து செய்யப்பட்டு பயணகிகள் அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு வரும் மற்றொரு டைகர் ஏர்லைன்ஸில் மாற்று கண்ணாடி கொண்டு வரப்பட்டு பழுது நீக்கியப்பின் நாளை காலை 10.30 மணிக்கு மீண்டும் இந்த விமானம் சிங்கப்பூர் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன்னல் கண்ணாடியில் விரிசல் இருந்தது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷட வசமாக 167 பயணிகள் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.