டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம்

News image
Updated On :2 டிசம்பர் 2014, 9:25 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோரிக்கைகள்:

விருதுநகர் மாவட்ட அளவிலான மகளிர் நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்க அரசாணை வெளியிட்டு 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில், மகளிர் நீதிமன்றம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனை உடனே அமைக்க வேண்டும்.

5 மாதங்களாக காலியாக உள்ள விரைவு நீதித்துறை நடுவர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்ட மறுநாளில் இருந்து, சுமார் 3 மாதங்களாக இந்த நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. உடனே இப் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த, கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விருதுநகருக்கு மாற்றப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக இதனை உடனே முன்புபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18-ம் தேதி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்குரைஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சற்று நேரத்தில் இந்த இடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரமுள்ள சித்தலாம்புத்தூர் விலக்கில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தலைமையில் இதே வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் சுமார் 100 வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து வழக்குரைஞர் சங்கத் தலைவர் கதிரேசன் கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை தொடர்ந்து புறக்கணித்து போராட்டம் நடத்துவார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.