மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்:வேல்முருகன்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

News image
Updated On :6 டிசம்பர் 2014, 12:39 pm

இன்பராஜ்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

 தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

 மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. தமிழர்களுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.  தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமான  இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பதை முந்தைய காங்கிரஸ் ஆட்சி குப்பை தொட்டியில் வீசியது போல அல்லாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கும் வகையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள  தீர்மானங்களுக்கு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தமிழர்களின் உரிமைக்காக பேராடும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை பாஜகவினர் ஒருமையில் பேசி மிரட்டி  வருகிறார்கள். அவர்கள் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. தமிழக தலைவர்களை மிரட்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தமிழகத்துக்குள் நுழைய தடைவிதித்து, அவரை கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.

 தொடர்ந்து, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவ விடுதலை இயக்கத் தலைவர் அலங்காரபரதர் தனது ஆதரவாளர்களுடன் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் இணைந்தார். நிகழ்ச்சியில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொதுச் செயலர் காவேரி, பொருளாளர் அக்ரம் கான், தென் மண்டல செயலர் தமிழ்நேசன், மாவட்டச் செயலர் மாரிச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.