ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தை புகைப்படம் எடுத்தவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமஜென்ம பூமியை முழுவதுமாக மீட்டுத் தர மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை இஸ்லாமியரைப் போன்ற


ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை இந்து முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டதைப் புகைப்படம் எடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமஜென்ம பூமியை முழுவதுமாக மீட்டுத் தர மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை இஸ்லாமியரைப் போன்ற தோற்றம் உடைய இளைஞர் புகைப்படம் எடுத்தார். இதனை அறிந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், இளைஞரை பிடித்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர், சிங்கம்மாள்புரம் தெருவைச் சேர்ந்த முகமது உமர் (20) என்பது தெரியவந்தது. அவர் திருசசியிலிருந்து வெளிவரும் இஸ்லாமிய இதழான சுமைதாங்கியன் நிருபர் என்று கூறியுள்ளார்.
இந்து முன்னணியினர் கொல்லப்படும் போதெல்லாம் இதுபோன்று புகைப்படங்கள் எடுத்து திட்டமிடுவதாய் கூறி, மாவட்டத் தலைவர் சிவசாமி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து முகமது உமரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...