தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஜோதிடர் பேச்சை நம்பி கணவரை கொலை செய்த மனைவி கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியை சேர்ந்த அரசி வியாபாரி கதிர்வேல்(70) என்பவருக்கு வேறு மனைவி உள்ளது, இதனால் கணவனால் உனது உயிருக்கு ஆபத்து

Updated On :13 டிசம்பர் 2014, 12:34 pm

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியை சேர்ந்த அரசி வியாபாரி கதிர்வேல்(70) என்பவருக்கு வேறு மனைவி உள்ளது, இதனால் கணவனால் உனது உயிருக்கு ஆபத்து என்று ஜோசியக்காரன் கூறியதை கேட்டு பயத்தில் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கதிர்வேலை அவரது மனைவி விஜயலட்சுமி(60) கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் கன்னிகைபேர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல். அரிசி மொத்த வியாபாரியான இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், கன்னியப்பன் (38) என்ற மகனும் உள்ளார். பேச்சுத்திறன் அற்ற மாற்றுத் திறனாளியான கன்னப்பனுக்கு சித்ரா தேவி என்ற மனைவியும், ஸ்ரீமதி (8) என்ற மகளும் உள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில மாதமாக சித்ராதேவி அவரது குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்து வந்தார். விஜயலட்சுமி கதிர்வேலை திருமணம் செய்துக் கொண்டதில் இருந்தே அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேக கண்ணோட்டத்தில் பார்த்து வந்தார். காலம் கடந்து முதிய வயதை அடைந்தாலும் விஜயலட்சுமிக்கு கணவர் மீதான சந்தேகம் தீரவில்லை. கதிர்வேல் மருமகள் மற்றும் பேத்தியுடன் எப்போதும் பாசமாக இருப்பார்.

கதிர்வேல் அவரது மருமகளிடம் பாசத்துடன் பேசுவதை கண்டால் கூட விஜயலட்சுமி கதிர்வேலிடம் சண்டை போடுவாராம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி ஜோசியர் ஒருவரிடம் ஜோசியம் பார்க்க சென்றார். அப்போது ஜோசியர் உனது கணவர் வேறொருவரை நிச்சயம் திருமணம் செய்து உன்னை பிரிந்து விடுவார், அவர்கள் சூன்யம் வைத்து உன்னை கொன்று விடுவார்கள் என பயமுறுத்தி இருக்கிறார்.

இதனால் பயத்தாலும் மன உளைச்சலிலும் விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக இருந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கதிர்வேலின் கழுத்தில் அரிவாளை கொண்டு விஜயலட்சுமி வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த டி.எஸ்.பி குமரவேல், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரித்த போது தனது உயிருக்கு தனது கணவரால் ஆபத்து உள்ளது என்று ஜோசியக்காரன் சொன்னதால் தான் அவரை கொன்றுவிட்டதாக விஜயலட்சுமி கூறியுள்ளார். தொடர்ந்து போலீஸார் விஜயலட்சுமி கைது செய்து காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஜோசியக்காரன் பேச்சை கேட்டு முதிய வயதான கணவரை சந்தேகத்துடன் பார்த்து அவரை கொலை செய்த மனைவியின் செய்கையால் பெரியபாளையம் பகுதி முழுக்க அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.