கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் சாலை தடுப்பில் பைக் மோதியதில் ஜேம்ஸ்(45) சம்பவ இடத்திலேயே பலியானார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் என்கிற பேரரசு (வயது 46). இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் புதன்கிழமை இரவு ஜேம்ஸ் எளாவூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது சின்ன ஓபுளாபுரம் பகுதியில் வந்த போது சாலை தடுப்பு சுவரில் எதிர்பாராத வகையில் அவரது பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜேம்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜேம்ஸின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

