ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி தனியார் விடுதியில் இருவர் தற்கொலை

பழனியில் தனியார் விடுதியில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் சேகர்(39).  இவருக்கு திருமணமாகி ரதிதேவி, கவிதா என இரு மனைவிகள் உள்ளனர்.  ரதிதேவிக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2014, 2:59 am

என்.​ அங்​கு​பாபு

பழனியில் தனியார் விடுதியில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் சேகர்(39).  இவருக்கு திருமணமாகி ரதிதேவி, கவிதா என இரு மனைவிகள் உள்ளனர்.  ரதிதேவிக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கவிதாவுக்கு ஒரு மகள் உள்ளார்.  சேகர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் நர்சிங் கல்லூரியில் சமையல்காரராக வேலை செய்துள்ளார்.  அப்போது கல்லூரியில் பயின்ற அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவர் மகள் சத்யா(24) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.  இதை அறிந்த சத்யாவின் அண்ணன் இருவரையும் கண்டித்துள்ளார்.  மேலும் கல்லூரி நிர்வாகம் சேகரை கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளது.  எனினும் இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். 

இந்நிலையில் வியாழக்கிழமை சத்யாவும், சேகரும் ஊரை விட்டு வெளியேறி பழனி வந்து அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.  வெள்ளிக்கிழமை காலை அறையை சுத்தம் செய்ய வந்த போது கதவு திறக்காததால் அவர்கள் இருவரும் தூங்குவதாக நினைத்து பணியாளர் சென்றுவிட்டார்.  மாலையில் அறையில் இருந்து மருந்து வாடை வரவே பின்புற ஜன்னலை உடைத்து திறந்து பார்த்த போது இருவரும் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பழனி டவுன் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கதவை உடைத்து  இறந்த இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.