ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மோடியோ ராகுலோ யார் வென்றாலும் ஆட்சி செய்வது அம்பானியே : ராகுலுக்கு எழுதிய கடிதத்தில் கெஜ்ரிவால் காட்டம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது நான்கு கேள்விக்கு பதிலளிக்கும் படி கடிதம் எழுதியள்ளார். இது குறித்து அவர்

News image
Updated On :24 பிப்ரவரி 2014, 9:40 am

வேல்முருகன்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது நான்கு கேள்விக்கு பதிலளிக்கும் படி கடிதம் எழுதியள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், முகேஷ் அம்பானியின் ஒரு  பாக்கெட்டில் மோடியும், இன்னொரு பாக்கெட்டில் ராகுலும் உள்ளனர்.

 இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை ஆளப்போவது அம்பானியே. கிழக்கிந்திய கம்பெனியைப் போல் உள்ள  அம்பானி ஆட்சி செய்வதை நாங்கள் நிறுத்தியுள்ளோம் என்றார். இந்நிலையில் ராகுல் காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் எழுப்பியுள்ள கேள்விகள் பின்வருமாறு:

முகேஷ் அம்பானிக்கு  ஒரு யூனிட் கேஸ் விலையை 8 டாலர் கொடுத்து வாங்கவுள்ள முடிவினை நிறுத்த தயாரா?

முகேஷ் அம்பானிக்கும், உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் உள்ள தொடர்பு என்ன?

எவ்வளவு பணம் இந்த தேர்தலில் செலவழிக்கவுள்ளீர்கள்? அதற்கான நிதி எங்கிருந்து வருகிறது?

நீங்கள் வீரப்பமொய்லிக்கு எம்பி தேர்தலில் சீட் கொடுக்க போகிறீர்களா? மற்ற அமைச்சர்களான சல்மான் குர்ஷித், கமல் நாத், சரத் பவார், ப. சிதம்பரம் கபில் சபில் உட்பட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இவர்கள் அனைவருக்கும் சீட் கொடுக்கப்போகிறீர்களா? இவ்வாறு ராகுலுக்கு கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.