திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஒகேனக்கல் குடிநீர்த் தொட்டிகளை கண்காணிக்க கேமிரா: ஆட்சியர் கே.விவேகானந்தன்

ஒகேனக்கல் குடிநீர் திட்ட தொட்டிகள், குழாய்கள், வால்வுகள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்த ஆலோசனக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை

News image
Updated On :7 ஜனவரி 2014, 1:39 pm

ராதாகிருஷ்ணன்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத் தொட்டிகளை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட உள்ளதாக ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.

ஒகேனக்கல் குடிநீர் திட்ட தொட்டிகள், குழாய்கள், வால்வுகள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்த ஆலோசனக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, தலைமை வகித்து ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் பையர்நத்தம் நீர்த்தேக்கத் தொட்டியில் திங்கள்கிழமை குருனைமருந்து கலக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த உடன், நீர் வெளியேற்றப்பட்டு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அனைத்து குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

குடிநீர்த் தொட்டிகள் உள்ள இடங்களில் சூரிய ஒளி மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். மாவட்டத்தில் ஒவ்வொரு மாதம் 29-ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளில் ஒகேனக்கல் குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்திட வேண்டும். அனைத்து குடிநீர் தொட்டிகளையும் கண்காணிக்க கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில், குடிநீர் குழாய்களை சேதப்படுத்துவோர், குடிநீரில் குருனை மருந்து உள்ளிட்ட விஷ மருந்து கலக்க முற்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிநீர்த் தொட்டிகளுக்கு மூடி போட்டு பூட்ட வேண்டும். காற்று செல்லும் குழாய்களில் வலை அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏணிக்கு கதவு அமைத்தல், சமநிலை நீர்த்தேக்க தொட்டியினை சுற்றி கம்பி வேலி ஆகிவற்றை அமைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் குடிநீர் குழாய் செல்வதால், உள்ளாட்சி அமைப்புக்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் போது, குழாய் பாதையை அறிந்து அதனை சேதப்படுத்தாமல் அமைக்க வேண்டும். மீறி குழாய்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை கண்காணிக்க ரோந்து செல்ல வேண்டும் என்றார் ஆட்சியர்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், ஒகேனக்கல் குடிநீர் திட்ட செயற்பொறியாளர் பி.மணிவண்ணன், அரூர் கோட்டாட்சியர் ஆர்.சந்திரசேகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் டி.ராமு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.