தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

என் மனைவி உட்பட எந்த பெண்ணையும் மது அருந்துமாறு வற்புறுத்தியது கிடையாது: கங்குலி

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து மேற்குவங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இரூந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி பதவிவிலகினார். இது குறித்து அவர் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள

News image
Updated On :8 ஜனவரி 2014, 10:57 am

வேல்முருகன்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து மேற்குவங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இரூந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி பதவிவிலகினார். இது குறித்து அவர் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

என் மீது சுமத்தப்படும குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றது; மாநில மற்றும் மத்திய அரசுகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன; தேவையில்லாமல் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளேன்,

எனக்குஎதிர்ப்புக்கள் அதிகரித்ததால் நான் பதவி விலகினேன்; என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒருதலைபட்சமானது;  நான் என் மனைவி உட்பட எந்த பெண்ணையும் மது அருந்த வற்புறுத்தியது கிடையாது. இந்நிலையில் மது அருந்துமாறு நான் எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும். நான் அப்பெண்ணை என்னுடன் தங்க வற்புறுத்தவில்லை; அவள் ஏற்கனவே ஹோட்டலில் தான் தங்கி இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.