மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கேரளத்துக்கு சுமை ஆட்டோவில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் சுகிபிரேமலா, வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஓட்டுநர் ஜான்பிரைட் உள்ளிட்டோர் புதன்கிழமை காலையில் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில்

Updated On :22 ஜனவரி 2014, 10:59 am

குழித்துறை அருகே கேரளத்துக்கு சுமை ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் சுகிபிரேமலா, வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஓட்டுநர் ஜான்பிரைட் உள்ளிட்டோர் புதன்கிழமை காலையில் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த சுமை ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினர். ஆட்டோ நிற்காமல் சென்றதையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனர். குழித்துறை சந்திப்பு கடந்து கல்லுக்கட்டி பகுதியில் சென்றபோது சுமை ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடினார்.

தொடர்ந்து சுமை ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் கழிவு பேப்பர் மூட்டையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.