ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி மலைக்கோயிலில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் அதிமுகவினர் தங்கத்தேர் புறப்பாடு

பழனி மலைக்கோயிலில் நாள்தோறும் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்று வருகிறது.  தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கத்தேர் புறப்பாடுக்கு பணம் கட்டி புறப்பாடு நடத்தும் நிலையில் பக்தர்கள்

News image
Updated On :22 ஜனவரி 2014, 3:35 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் தொகுதி அதிமுகவினர் 10 நிலைகளுக்கும் தங்கத்தேருக்கு பணம் கட்டி புறப்பாடு செய்தனர்.

பழனி மலைக்கோயிலில் நாள்தோறும் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்று வருகிறது.  தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கத்தேர் புறப்பாடுக்கு பணம் கட்டி புறப்பாடு நடத்தும் நிலையில் பக்தர்கள் நலன்கருதி தேர் இழுக்க மலைக்கோயில் பிரகாரத்தில் முதல் நிலை மற்றும் 9 நிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று முதல்வர் பிரதமராக வேண்டும் என்றும் பல்லடம் அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் நகர செயலாளர் சரளை ரத்தினசாமி தலைமையில் தங்கத்தேர் புறப்பாடு செய்தனர். 

நிகழ்ச்சியில் தங்கத்தேர் புறப்பாடு நடக்கும் 10 நிலைக்கும் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பணம் கட்டி புறப்பாடு செய்யப்பட்டது.  சாயரட்சையின் போது முதல்வர் பெயரில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகளும் செய்யப்பட்டது.  நிகழ்ச்சியில் நகர பொருளாளர் தர்மராஜ், நகர துணை செயலாளர் பாரதி செல்வராஜ், அம்மாபேரவை செயலாளர் ராஜேந்திரன்,அம்மாபேரவை தலைவர்  வைஸ் பழனிச்சாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ரட்சியினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.