விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செலவுக்கு பணம் தராத கணவர் மீது நடவடிக்கை கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா

பழனியில் கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். பழனி சாமிதியேட்டர் அருகே கிருஷ்ணமூர்த்தி தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை மனைவி அழகுசுந்தரி

News image
Updated On :28 ஜனவரி 2014, 1:14 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். பழனி சாமிதியேட்டர் அருகே கிருஷ்ணமூர்த்தி தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை மனைவி அழகுசுந்தரி(42).  இவர் பழனி அருகே தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார்.  இவருக்கு விமல்ராஜ்(2) என்ற மகனும், மேனகா(7) என்ற மகளும் உள்ளனர். 

பாண்டித்துரை விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார்.  இந்நிலையில் பாண்டித்துரையும், மாமியார் அழகம்மாளும் அழகுசுந்தரி வேலை செய்து கொண்டு வரும் சம்பளத்தை பறித்து விட்டு அவரது செலவுக்கு கூட பணம் தராமல் கொடுமை செய்துள்ளனர்.  சிலவேலைகளில் தட்டிக்கேட்ட போது அவரை தாக்கியும் உள்ளனர்.

 இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் செய்தும் போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.  கணவருக்கு ஆதரவாகவே போலீஸார் செயல்பட்டுள்ளனர்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குழந்தைக்கு சாப்பாட்டுக்காக வைத்திருந்த ரூபாயைக் கூட அவர்கள் பறித்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த அழகுசுந்தரி சாமிதியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே குழந்தைகளுடன் திடீரென சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.  இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மகளிர் போலீஸார் அவரை குழந்தைகளுடன் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் கணவர் மீது புகார் வழங்குமாறு அறிவுறுத்திய போலீஸார் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர்.  ஆனால் நேற்று மாலை வரை அழகுசுந்தரியின் புகார் பதிவு செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.