செலவுக்கு பணம் தராத கணவர் மீது நடவடிக்கை கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா
பழனியில் கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். பழனி சாமிதியேட்டர் அருகே கிருஷ்ணமூர்த்தி தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை மனைவி அழகுசுந்தரி


பழனியில் கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். பழனி சாமிதியேட்டர் அருகே கிருஷ்ணமூர்த்தி தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை மனைவி அழகுசுந்தரி(42). இவர் பழனி அருகே தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு விமல்ராஜ்(2) என்ற மகனும், மேனகா(7) என்ற மகளும் உள்ளனர்.
பாண்டித்துரை விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இந்நிலையில் பாண்டித்துரையும், மாமியார் அழகம்மாளும் அழகுசுந்தரி வேலை செய்து கொண்டு வரும் சம்பளத்தை பறித்து விட்டு அவரது செலவுக்கு கூட பணம் தராமல் கொடுமை செய்துள்ளனர். சிலவேலைகளில் தட்டிக்கேட்ட போது அவரை தாக்கியும் உள்ளனர்.
இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் செய்தும் போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். கணவருக்கு ஆதரவாகவே போலீஸார் செயல்பட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குழந்தைக்கு சாப்பாட்டுக்காக வைத்திருந்த ரூபாயைக் கூட அவர்கள் பறித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அழகுசுந்தரி சாமிதியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே குழந்தைகளுடன் திடீரென சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மகளிர் போலீஸார் அவரை குழந்தைகளுடன் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் கணவர் மீது புகார் வழங்குமாறு அறிவுறுத்திய போலீஸார் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர். ஆனால் நேற்று மாலை வரை அழகுசுந்தரியின் புகார் பதிவு செய்யப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...