திருக்கோயில் முடிக்காணிக்கை பகுதியில் பரபரப்பு
பழனிக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் திருக்கோயில் முடிக்காணிக்கை நிலையங்கள் உள்ளது. இங்கு பக்தர்களிடம் ரூபாய் 10 கட்டணம்


பழனி திருக்கோயில் முடிக்காணிக்கை பகுதியில் புகார் பெட்டி வைப்பது தொடர்பாக தொழிலாளர்கள் இடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பழனிக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் திருக்கோயில் முடிக்காணிக்கை நிலையங்கள் உள்ளது. இங்கு பக்தர்களிடம் ரூபாய் 10 கட்டணம் பெறப்படுகிறது. இதில் ரூ.5 முடிதிருத்துவோருக்கும், பாக்கி ஐந்து ரூபாய் பிளேடு மற்றும் திருக்கோயில் காணிக்கையாகவும் பகிரப்படுகிறது. இந்நிலையில் திருக்கோயில் முடிதிருத்துவோருக்கு மிகவும் குறைவான வருவாய் வருவதால் மொட்டையடிப்பவர்களிடம் அன்பளிப்பு கேட்டு பெறுகின்றனர். இந்நிலையில் சிலர் கட்டாயவசூல் செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திருக்கோயில் சார்பில் புகார்பெட்டி வைக்க முற்பட்டபோது முன்னரே சிக்கல் ஏற்பட்டது. தங்களுக்கு நிரந்தர வருவாய்க்கு தொகுப்பூதியம் வழங்க பலமுறை கோரிக்கை வைத்தும் அது நிராகரிக்கப்பட்டு வரும் நிலையில் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் முதல் ஆயிரத்தைந்நூறு வரையிலான தொகையை வைத்து குடும்பத்தை காப்பாற்ற முடியாது என முடிதிருத்துவோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் புகார் பெட்டி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் இதை கண்டித்து மொட்டையடிக்கும் பணியை முடிதிருத்துவோர் புறக்கணித்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்கோயில் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து முடிதிருத்துவோர் மீண்டும் பணிகளை துவக்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...