பழனியில் தை அம்மாவாசை பக்தர்கள் கூட்டம்
பழனியில் வியாழக்கிழமை தை அம்மாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.


பழனியில் வியாழக்கிழமை தை அம்மாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
மாதந்தோறும் வரும் அம்மாவாசை நாட்களில் தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அம்மாவாசை தினம் சிறப்பு பெற்றதாகும். வியாழக்கிழமை தை அம்மாவாசை என்பதால் பழனி மலைக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காலை முதலே வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர். வின்ச், ரோப்கார் நிலையங்களிலும் மலைக்கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்களுக்கு போதிய சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்திருந்தது. எனினும் போதிய கூடுதல் பேருந்துகள் இயக்காததால் பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்து முண்டியத்து ஏறினர்.
குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள், வயதானவர்கள் பேருந்தில் ஏறமுடியாமல் அவதிப்பட்டனர். பழனி சண்முகநதியில் ஏராளமானோர் வந்திருந்து மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...