பழனி மலைக்கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். உடன் மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்


பழனி கோயிலில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். உடன் மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முத்து தியாகராஜன், தலைமையிடத்து இணை ஆணையர் சுதர்சன், பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா ஆகியோர் இருந்தனர்.
பழனி மலைக்கோயிலில் செயல்பட்டு வரும் ரோப்கார், வின்ச் மற்றும் நாள் முழுக்க அன்னதான திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் செயல்பட்டு வரும் திருக்கோயில் சார்பில் அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் நிலையத்தை பார்வையிட்டார். அடிவாரம் பகுதியில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடம், திருக்கோயிலுக்கு உட்பட்ட கல்லூரிகள், பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள், திருஆவினன்குடி, பெரியாவுடையார் கோயிலில் நடைபெற்று வரும் குடமுழுக்கு திருப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து திருக்கோயில் தலைமை அலுவலகத்தில் அலுவலக அதிகாரிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவில் ஆணையர் தனபால் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 5,351 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தவிர திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 3,700 ஏக்கர் நிலங்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை அர்ச்சனைப் பொருட்கள் திருக்கோயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழனி மலைக்கோயிலில் அர்ச்சனை செட் ரூ.25க்கும், திருஆவினன்குடி கோயிலில் எள்ளுப்பொட்டலம் ரூ.1, எண்ணையுடன் எள்ளுப்பொட்டலம் ரூ.3க்கு திருக்கோயிலே விற்பனை செய்கிறது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த பதாகைகள் பல்வேறு இடங்களில் வைக்கப்படும்.
பழனிக்கோயிலிலும், கல்லூரி, பள்ளிகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப எம்ப்ளாயின்மெண்ட் அலுவலகத்திடம் பட்டியல் கேட்டுள்ளோம். சுகாதாரம்,பாதுகாப்பு முன்னரே அவுட்சோர்சிங் மூலம் சரி செய்துள்ளோம். இரண்டாவது ரோப்கார் பெரிய திட்டமாகும். இதற்கென வல்லுனர் குழு உள்ளது. அவர்கள் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பழனி திருஆவினன்குடி, அருள்மிகு பெரியாவுடையார் கோயில் மற்றும் கொடைக்கானல் அருள்மிகு குறிஞ்சியாண்டவர் கோயில் குடமுழுக்கு இன்னும் மூன்று மாதங்களில் அடுத்தடுத்து செய்ய ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பழனி மலைக்கோயிலில் உள்ள தங்கத்தொட்டிலில் இய ஒருவயது குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று இனிவரும் நாட்களில் இரண்டு வயது குழந்தைகள் வரை அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும் நிரந்தர கட்டளையும் பக்தர்கள் கோரிக்கைக்கேற்ப ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
திருக்கோயில் பணியாளர்களின் மூப்புபட்டியல், பதவி உயர்வு குறித்த பட்டியலும் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் பிரகாசம், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாச்சிமுத்து உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும், அலுவலர்களும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...