கிராம உதவியாளர் மீது கவுன்சிலர் புகார்
பழனி நகராட்சி 31வது வார்டை சேர்ந்தவர் கணேஷ்வரி நடராஜன். இவர் வார்டு கவுன்சிலர் ஆவார். இவர் கோட்டாட்சியர் சுந்தர்ராஜனிடம் கிராம உதவியாளர் சுசீலா என்பவர் மீது புதன்கிழமை புகார்


பழனியில் கிராம உதவியாளர் மீது கவுன்சிலர் புகார் செய்துள்ளார்.
பழனி நகராட்சி 31வது வார்டை சேர்ந்தவர் கணேஷ்வரி நடராஜன். இவர் வார்டு கவுன்சிலர் ஆவார். இவர் கோட்டாட்சியர் சுந்தர்ராஜனிடம் கிராம உதவியாளர் சுசீலா என்பவர் மீது புதன்கிழமை புகார் கொடுத்துள்ளார். புகாரில், சிவகிரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வேலை செய்யும் சுசீலா முதியோர் உதவித் தொகை கேட்டு வருவோரிடம் முதல் பணத்தில் ரூ.800 கையூட்டாக வாங்கியுள்ளார். மேலும், இடையே பண்டிகை நாட்களில் பணம் தராததால் பலரையும் தவறான தகவல் கொடுத்து ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டார்.
இதில் உடல் ஊனமுற்றோரும் அடங்கியுள்ளனர். ஆகவே, கோட்டாட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டோர் உண்மையிலேயே வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் என்பதை அறியுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் மேற்படி நபர் சுசீலா அரசின் இலவசப்பட்டாவையும் பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், புகார் குறித்து தனி வட்டாட்சியருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் நேரில் வரச்சொல்லி தகவல் தெரிவித்துள்ளேன்.
புகாரில் உண்மை இருந்தால் கிராம உதவியாளர் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...