அறந்தாங்கி அருகே மயில்கள் மர்ம மரணம்
அறந்தாங்கி அருகே கம்மங்காடு கண்மாய் அருகே உள்ள தைலமரக்காட்டில் 10-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்துகிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்குள்ள தைலமரக்காட்டில் நேற்று புதன்கிழமை வரை


அறந்தாங்கி அருகே கம்மங்காடு கண்மாய் அருகே உள்ள தைலமரக்காட்டில் 10-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்துகிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்குள்ள தைலமரக்காட்டில் நேற்று புதன்கிழமை வரை ஏராளமான மயில்கள் இறந்து கிடந்துள்ளன. இறந்த மயில்களின் உடலை அங்குள்ள தெருநாய்கள் கடித்து தின்றதில் சில நாய்களும் இறந்துவிட்டது ஆகவே மயில்கள் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை கம்மங்காட்டில் ஏராளமான மயில்கள் இறந்துகிடப்பதாக வனத்துறை, அரசு அலுவலர்களுக்கும் நிருபர்களுக்கும் தொலைபேசியில் செய்திகள் வந்ததையடுத்து கிராமத்திற்குள் சென்று பார்பதற்குள் அனைத்து உடல்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.தைலமரக்காட்டில் பல இடங்களில் மயில்களின் இறகுகள் கிடந்தன பல இடங்களில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் உடல்கள் கண்டுபிடிக்காத காரணத்தால் வனத்துறையினர், வருவாய்துறை, காவல்துறையினர் திரும்பிச்சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...