தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளி மாணவியுடன் பேரூந்து நடத்துநர் தற்கொலை

அறந்தாங்கி அருகே ஆணைக்கட்டிகொல்லையைச்சேர்ந்த  கணேசன் மகன் நீலகண்டன்(21), இவர் தனியார் பேரூந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.அத்தாணி திருவப்பாடியை சேர்ந்த சிவமணி மகள் நமிதா(17)

News image
Updated On :6 ஜூலை 2014, 11:43 am

கவியழகன்

புதுக்கோடடை மாவட்டம் அறந்தாங்கி அருகே பள்ளி மாணவியும் தனியார் பேரூந்து நடத்துநரும் மரத்தில் தூக்கிட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி அருகே ஆணைக்கட்டிகொல்லையைச்சேர்ந்த  கணேசன் மகன் நீலகண்டன்(21), இவர் தனியார் பேரூந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.அத்தாணி திருவப்பாடியை சேர்ந்த சிவமணி மகள் நமிதா(17) இவர் பேராவூரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். தினமும் தனியார் பேரூந்தில் பள்ளிக்கு சென்றுவந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆணைக்கட்டிக் கொல்லையில் உள்ள மாரியம்மன்கோயில் அருகே உள்ள கருவேலமரத்தில் இருவரும் தூக்கில் தொங்கியநிலையில் இறந்துள்ளனர்.அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில் நாகுடி காவல்துறையினர் இருவரது உடலையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டுவந்துள்ளனர்.

அறந்தாங்கி காவல் ஆய்வாளர் சு.முருகவேல் வழக்கு பதிவு செய்து காதல் விவகாரத்தில் இறந்தார்களா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்திவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.