தொழிற்சங்க நிர்வாகியை தாக்கிய நடத்துநர் இருவர் மீது வழக்கு
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(47).அரசு பேருந்து ஓட்டுநரான இவர் அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.ஆலங்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட போக்குவரத்து


ஆலங்குடியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகியை தாக்கிய அரசுப் பேருந்து நடத்துநர் இருவர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸôர் வழக்கு பதிவு செய்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(47).அரசு பேருந்து ஓட்டுநரான இவர் அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.ஆலங்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட போக்குவரத்து பணிமனையில் அண்ணா தொழிற்சங்கத்தில் தலைவர்,செயலர்,பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 13-ம் தேதி நடைபெற்றது.
இதில் செயலர் பதவிக்காக மாசிலாமணியும்,ஆலங்குடியைச் சேர்ந்த நடத்துநர் கோ.மாணிக்கம் என்பவரும் போட்டியிட்டனர்.அதில் மாசிலாமணி வெற்றி பெற்றார்.தேர்தல் போட்டி காரணமாக இருவருக்கும் விரோதம் இருந்துள்ளதுஇந்நிலையில் மாசிலாமணி சனிக்கிழமை மாலை போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள தேநீர் விடுதியில் நின்றாராம்.அப்போது அங்கே வந்த மாணிக்கம், பாப்பான்விடுதியைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய இருவரும் மாசிலாமணியை அவதூறாக பேசியதுடன் தாக்கியுள்ளனர்.இதனால் காயமடைந்த மாசிலாமணி சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மாசிலாமணி அளித்த புகாரையடுத்து வழக்கு பதிவு செய்த ஆலங்குடி போலீஸார் மாணிக்கம், சிவக்குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...