பாலாறு அணையில் குடிநீர் தேவைக்கு நீர் திறப்பு
பழனி அருகே உள்ளது பாலாறு பொருந்தலாறு அணைக்கட்டு. மாவட்டத்தின் பெரிய அணைக்கட்டான இது பழனி நகர மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது பருவமழை


பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணையில் கிராமங்களின் குடிநீர் தேவைக்காக 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பழனி அருகே உள்ளது பாலாறு பொருந்தலாறு அணைக்கட்டு. மாவட்டத்தின் பெரிய அணைக்கட்டான இது பழனி நகர மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது பருவமழை பொய்த்ததால் அணையில் மிக குறைந்த அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. சுமார் 65 அடி உயரமுள்ள இந்த அணையில் 27அடி அளவிற்கே தண்ணீர் உள்ளது.
இந்நிலையில் இந்த அணையில் இருந்து மானூர், நரிக்கல்பட்டி, தொப்பம்பட்டி வரை உள்ள கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 300கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் ஆற்றோரம் உள்ள கிணற்றுகளில் தண்ணீர் ஊற்றெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரிலேயே அணை திறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் திங்கள்கிழமை மாலை திறக்கப்பட்ட ஷட்டர் புதன்கிழமை(இன்று) மாலை மூடப்பட்டு விடும் என்றும் பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனி நகர்மன்ற தலைவர் வேலுமணி கூறுகையில், பழனி பாலாறு அணையில் இருந்து பழனி நகர மக்களின் தேவைக்கும், பக்தர்களின் தேவைக்கும் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. அணையில் தற்போது மிக குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் உள்ள சேற்றின் அளவையும் சேர்த்தே அதிகாரிகள் உயரத்தை கணக்கிட்டு வருகின்றனர். தற்போதைய தண்ணீர் திறப்பால் பழனிக்கு செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...