நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை முதல் ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பயன்பாட்டிலுள்ள ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை முதல் ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து பழனிக்கோயில் தரப்பில்

News image
Updated On :26 ஜூலை 2014, 2:30 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பயன்பாட்டிலுள்ள ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை முதல் ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து பழனிக்கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தின் முதன்மைக்கோயிலான பழனியில் ரோப்கார் இயக்கம் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.  ரோப்கார் இயக்கத்தில் பராமரிப்புப் பணிக்காக நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமும், மாதம் ஒருமுறை ஒரு நாளும் இயக்கம் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் இயக்கம் நாளை (ஜீலை.28) முதல் ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படவுள்ளது. 

இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் நாச்சிமுத்து கூறுகையில், இந்த நாட்களில் மலைக்கோயில் மேல்தளத்திலுள்ள ரோப்கார் நிலையம், கீழ்த்தளம் ஆகியவற்றில் மராமத்துப் பணிகளும், எலக்ட்ரிக்கல், ஜெனரேட்டர் பணிகளும், ரோப்கார் பெட்டிகள் சீரமைத்து பொலிவு செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.  தவிர சுமார் 300அடி உயரத்தில் உள்ள டவரில் பேரிங்குகள், ரப்பர் சக்கரங்கள் ஆகியவை கழற்றப்பட்டு மாற்றப்பட வேண்டியவை மாற்றி கவுண்ட்டர் வெயிட் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.