பழனி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டியை சேர்ந்தவர் வேலப்பன். இவர் திருப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் முனியப்பராஜன்(29). இவருக்கு திருமணமாகி


பழனி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் இரு வாலிபர்கள் பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டியை சேர்ந்தவர் வேலப்பன். இவர் திருப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் முனியப்பராஜன்(29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. முனியப்பராஜனின் நண்பர் கொசவபட்டியை சேர்ந்த கருப்பணன் மகன் கதிர்வேல்(23). முனியப்பராஜனின் நண்பரின் குலதெய்வம் கோயில் பழனியை அடுத்த தேக்கன்தோட்டம் அருகே உள்ளது. இக்கோயிலில் புதன்கிழமை கிடாவெட்டு திருவிழா நடைபெற்றதால் முனியப்பராஜனும், கதிர்வேலும் மோட்டார்சைக்கிளில் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது விருந்திற்காக வெற்றிலை, பாக்கு வாங்க இருவரும் புளியமரத்துசெட்டுக்கு வரும் போது எல்லைக்கருப்பண்ணசாமி கோயில் அருகே இருந்த திருப்பத்தில் இருந்த பாறையில் மோதி இருவரும் தலைமையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...