மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மயிலாடுதுறை அருகே உணவகத்தில் தகராறு இளைஞர் கத்தியால் குத்திக் கொலை 

நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அருகே ஒரு உணவகத்தில் சுவையில்லாத உணவு வழங்கப்பட்டதைக் கண்டித்தத் தகராறில், ஒரு இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :4 ஜூன் 2014, 5:47 am

அன்புமணி ராமதாஸ்

நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அருகே ஒரு உணவகத்தில் சுவையில்லாத உணவு வழங்கப்பட்டதைக் கண்டித்தத் தகராறில், ஒரு இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

சீர்காழி வட்டம், அளக்குடி பண்டாரவாடைத் தெருவைச் சேர்ந்த ஜெயபால் மகன் கார்த்திகேயன்(30). கட்டடத் தொழிலாளரான இவர், மயிலாடுதுறை, கோழிகுத்தி (கோடிஹத்தி விமோசனபுரம்) கிராமத்தில் உள்ள தனது உறவினர் பாண்டியன் என்பவரின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தார்.

 கார்த்திகேயனும், உறவினர் பாண்டியனும் செவ்வாய்க்கிழமை இரவு மயிலாடுதுறை சித்தர்காட்டில் மது அருந்தி விட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர்.  அப்போது, உணவு சுவையாக இல்லை எனக் கூறி கார்த்திகேயன், உணவகப் பணியாளர்களிடம் தகராறு செய்தாராம். உணவகத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த 3 பேர் கொண்ட கும்பல், கார்த்திகேயனை கண்டித்து, சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில், கார்த்திகேயனுக்கும், அந்தக் கும்பலுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்ள், கார்த்திகேயனை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர். 

பலத்தக் காயமடைந்த கார்த்திகேயன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த கார்த்திகேயனுக்கு தேவிகலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.