மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு: கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் செல்வகணபதி ஆஜர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக பதியப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி செல்வகணபதி, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.கடந்த ஆண்டு மே

News image
Updated On :5 ஜூன் 2014, 10:52 am

ரவி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக பதியப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி செல்வகணபதி, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.கடந்த ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி திமுக சார்பில் கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே சேது சமுத்திரத் திட்ட விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அந்தக் கட்சியின் மாநில தேர்தல் பணிச் செயலாளர் செல்வகணபதி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசினாராம். இதையடுத்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தது தமிழக அரசு.

கிருஷ்ணகிரி முதன்மை நீதிமன்றத்தில், வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்வகணபதி நேரில் ஆஜரானார்.  இந்த வழக்கு தொடர்பான ஆவனங்களை தமிழக அரசு நீதிமன்றத்தல் தாக்கல் செய்யாததால், வழக்கை ஜூலை 14-ஆம் தேதிக்கு நீதிபதி யூசூப் அலி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.