பழனி ரோப் கார் பராமரிப்புக்காக நாளை மறுநாள் நிறுத்தம்
இதுகுறித்து பழனிக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது, பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு


பழனி ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து பழனிக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது, பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்கார் மதியம் ஒருமணி நேரம் மட்டும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் (ஜூலை.1) ஒருநாள் மட்டும் பழனி ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...