அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு
காரிமங்கலம் அருகே மாட்லம்பட்டி பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் நபர் இறந்துகிடந்தார். இறந்தவரின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து,


தருமபுரி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
காரிமங்கலம் அருகே மாட்லம்பட்டி பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் நபர் இறந்துகிடந்தார். இறந்தவரின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, காரிமங்கலம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸôர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கர்நாடகம் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
மேலும், இது குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...