தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளும், தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகளில் ஆர்வமாக செயல்படவில்லை. வேட்பாளர்களுக்கு சாதகமான போக்கையே தேர்தல் துறையினர் கையாண்டு வருகின்றனர். காரைக்காலை சேர்ந்த 2 பேர் அதிமுக, திமுக வேட்பாளராகவுள்ளனர். காங்கிரஸில் மத்திய இணை அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிகாரிகள் சாதகமான நிலை எடுத்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில், தேர்தல் பணி அனுபவமில்லாத அதிகாரிகள் நியமனத்தாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ம் தேதி தேர்தல் நடக்கவுளளது. தேர்தலுக்கு கால அவகாசம் உள்ள நிலையில், தேர்தல் முன் அனுபவமுள்ளவர்களை தேர்தல் துறை அதிகாரிகளாக நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தலைமைத் தேர்தல் ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அருள்முருகன்.